கவுகாத்தி
கொரோனாவை முன்னிட்டு கடந்த 2020 ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளையும் அசாம் அரசு தளர்த்தி உள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 25 அன்று கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தேசிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பிறகு பரவல் எண்ணிக்கையின் அடிப்படையில் புதிய கட்டுப்பாடுகள் மற்றும் கட்டுப்பாடு தளர்வுகளை அந்தந்த மாநிலங்கள் அறிவிக்கின்றன.
தற்போது கொரோனா பரவல் நாடெங்கும் குறைந்து வருகின்றது. இதையொட்டி அனைத்து மாநிலங்களிலும் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்படுகின்றன. அவ்வகையில் நாட்டில் முதல் மாநிலமாக அசாம் மாநிலத்தில் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் தளர்த்தி நேற்று முதல் தளர்த்தப்பட்டுள்ளன..
அசாம் அரசு கடந்த 2020 மார்ச் மாதத்தில் இருந்து விதிக்கப்பட்ட அனைத்துக் கட்டுப்பாடுகளையும் நேற்று தளர்த்தப்படுவதாக அறிவித்துள்ளது. அசாம் மாநிலத்தில் விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள், பொது இடங்கள், திருமணம், இறுதி சடங்கு ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன,
இதன் மூலம் அசாம் இந்தியாவில் கட்டுப்பாடுகள் அற்ற முதல் மாநிலம் ஆகிறது. இருப்பினும் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி, கைகள் சுத்தம் ஆகிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளன.
[youtube-feed feed=1]