ஒரு லட்சத்திற்கும் அதிகமான ரஷ்ய துருப்புகள் உக்ரைன் எல்லையில் குவிக்கப்பட்ட நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பு நடத்த இருப்பதாக பதற்றம் அதிகரித்தது.
ரஷ்யாவின் இந்த முயற்சியை முறியடிக்க ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் அமெரிக்க படைகள் குவிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது ரஷ்யாவின் மேற்கு மற்றும் தெற்கு பிராந்திய ராணுவ வீரர்கள் ரயில் மற்றும் சாலை வழியாக இன்று தங்கள் முகாமுக்கு திரும்பி வருவதாக ரஷ்ய செய்தி நிறுவனங்கள் கூறியுள்ளன.
ரஷ்ய துருப்புகள் உக்ரைன் எல்லையில் தாக்குதல் நிலையில் தயாராக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவை எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்று அமெரிக்கா எச்சரித்த நிலையில், ரஷ்யாவின் இந்த நடவடிக்கை அதற்கு முற்றிலும் மாறாக உள்ளது.
படையினரின் சில பிரிவு முகாமுக்கு அனுப்பப்பட்ட போதும் கிரிமியா மற்றும் உக்ரைன் எல்லையில் இராணுவப் பயிற்சிகள் தொடரும் என்று கூறப்படுகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கப்போவதாக மேற்கத்திய நாடுகள் விஷம பிரச்சாரம் மேற்கொண்டு வருவதாக ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் குற்றம் சாட்டி உள்ளது.
ஆனால் உக்ரைனின் வெளியுறவு மந்திரி, போரைத் தவிர்ப்பதற்கான மேற்கத்திய நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் செயல்படுகின்றன என்பதற்கு சான்றாக ரஷ்ய படைகள் வாபஸ் பெறப்பட்டுள்ளது என்று கூறினார், அதே நேரத்தில் படைகளைத் திரும்பப் பெறுவது என்பது ரஷ்யாவின் ஏமாற்று வேலைகளில் ஒன்றாகவும் இருக்கலாம் என்று எச்சரித்தார்.
உக்ரைனில் வசிக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற அமெரிக்க அதிபர் உத்தரவு…