சென்னை
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம் வரும் 17 ஆம் தேதி மாலை 6 மணியுடன் நிறைவு பெற உள்ளது.
தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடைமுறை விதிகளின்படி வாக்குப்பதிவு முடிவடையும் நேரத்துக்கு 48 மணி நேரம் முன்பாக அரசியல் கட்சிகளின் அனைத்து விதமான பிரசாரங்களையும் நிறுத்த வேண்டும். எனவே வரும் 17 ஆம் தேதி மாலை 6 மணியுடன் அனைத்து பிரசாரங்களும் நிறைவடைகிறது..
இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“வரும் 17 ஆம் தேதி மாலை 6 மணிக்கு மேல் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் ஏனைய பிரச்சாரங்கள் அனைத்தையும் மேற்கொள்ளக்கூடாது என்பதை அரசியல் கட்சியினர், வேட்பாளர் கடைப்பிடிப்பதை உறுதி செய்ய அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
தேர்தல் பிரசாரம் முடிந்த பின் கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள் அந்தந்த உள்ளாட்சி பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும் என்பது கட்டாயமாகும். அவ்வாறு வெளியோறதவர்கள் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்”
என அறிவித்துள்ளது.