டெல்லி: இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வரும் கோவா, உத்தரகாண்ட், உ.பி. மாநில சட்டமன்ற தேர்தலில், பிற்பகல் 3மணி வரையிலான வாக்குப்பதிவு நிலவரம் வளியாகி உள்ளது.
40 தொகுதிகளைக் கொண்ட கோவா பேரவைக்கும், 70 தொகுதிகளைக் கொண்ட உத்தரகண்ட் பேரவைக்கும் இன்று ஒரேகட்டமாகத் தோ்தல் நடைபெறுகிறது. மேம் உ.பி.யில் 2வது கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. காலையில் தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வமுடன் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் கோவா சட்டப்பேரவை பேரவைத் தேர்தலில் 1 மணி நிலவரப்படி 44.63% வாக்குகள் பதிவான நிலையில், பிற்பகல் 3மணி வரை கோவாவில் 60.18% வாக்குகள் பதிவாகி உள்ளன.
உத்தரகண்ட் பேரவைத் தேர்தலில் மதியம் 1மணி வரை 35.21 % வாக்குகள் பதிவானது. பிற்பகல் 3மணி நிலவரப்படி, அங்கு 49.24% வாக்குகள் பதிவாகி உள்ளனர்.
2வது கட்ட தேர்தல் நடைபெற்று வரும் உத்தரப் பிரதேசத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 51.93% வாக்குகள் பதிவாகி உள்ளன.
பதிவான வாக்குகள் அனைத்தும் மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. கோவா, உத்தரண்ட் ஆகிய இரு மாநிலங்களிலும் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.