பெங்களூரு: ஐபிஎல் ஏலத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 14 வீரர்கள் கலந்துகொண்ட நிலையில், 2 பேரை மட்டுமே, தமிழ்நாட்டைச் சேர்ந்த சிஎஸ்கே அணியினர் ஏலம் எடுத்துள்ளனர். ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்ட தமிழக வீரர்கள், எந்தெந்த அணியில் ஆடுகிறார்கள், அவர்களின் விலை என்ன என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

2022ம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான ஏலம் நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில், சிஎஸ்கே அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள், சின்னதல ரெய்னா, தென்னாப்பிரிக்கா வீரர் டுபிளெசிஸ் புறக்கணிக்கப்பட்டுள்ளது, சிஎஸ்கே ரசிகர்களிடையேஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த சிஎஸ்கே அணியில் தமிழக வீரர்களான எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் உள்பட பலர் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், முக்கிய தமிழக வீரர்களை புறக்கணித்துவிட்டு 2 இளம் வீரர்களுக்கு மட்டுமே சிஸ்கே நிர்வாகம் வாய்ப்பு கொடுத்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிஎஸ்கே அணியின் உரிமையாளராக இந்தியா சிமென்ட் நிறுவனத்தலைவர சீனிவாசனும், அவரது குடும்பத்தினரும் உள்ளனர். தமிழ்நாட்டை சேர்ந்த  சீனிவாசன்,  தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களின் முன்னேற்றத்தை ஊக்குவிக்காமல், பிற மாநில வீரர்களையும், அயல்நாட்டு வீரர்களையும் சிஎஸ்கே அணிக்காக வாங்கியிருப்பது தமிழ்நாட்டு ரசிகர்களியே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

2022 ஐபிஎல் ஏலத்தில் கலந்துகொண்ட தமிழக வீரர்கள் மற்றும் அவர்களின் விலை விவரம்:

1. ஆர். அஷ்வின் (சுழற்பந்து வீச்சாளர்)  – ராஜஸ்தான் ராயல்ஸ் – ரூ. 5 கோடி
2. வாஷிங்டன் சுந்தர்  – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ரூ. 8.75 கோடி
3. தினேஷ் கார்த்திக்  – ராயல் சேலஞ்சர்ஸ் – ரூ. 5.5 கோடி
4. சேலம் நடராஜன்  – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ரூ. 4 கோடி
5. ஹரி நிஷாந்த் – சென்னை சூப்பர் கிங்ஸ் – ரூ. 20 லட்சம்
6. ஷாருக்கான் – பஞ்சாப் கிங்ஸ் – ரூ. 9 கோடி
7. என். ஜெகதீசன் –  சென்னை சூப்பர் கிங்ஸ் – ரூ.20 லட்சம்
8. எம். அஷ்வின் – மும்பை இந்தியன்ஸ்  – ரூ.1.6 கோடி
9. சாய் கிஷோர் – குஜராத் டைட்டன்ஸ் – ரூ.3 கோடி
10. விஜய் சங்கர் – குஜராத் டைட்டன்ஸ் – ரூ.1.4 கோடி
11. சஞ்சய் யாதவ் – மும்பை இந்தியன்ஸ் – ரூ.50 லட்சம்
12. பி. இந்திரஜித் -கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ரூ.20 லட்சம்
13. சாய் சுதர்சன் -லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ரூ.20 லட்சம்
14. வருண் சக்ரவர்த்தி – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தக்கவைக்கப்பட்டது