டில்லி
இந்தியாவுக்கு அடுத்த வாரம் பிரான்ஸ் நாட்டில் இருந்து 3 ரஃபே;ல் விமானங்கள் வர உள்ளன.
பிரான்ஸ் நாட்டில் டசால்ட் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ரஃபேல் போர் விமானங்கள் பல்வேறு நவீன அம்,சங்களைக் கொண்டவை ஆகும்.. இந்த விமானம் வானில் இருந்து இலக்கை தாக்குதல் மற்றும் ஏவுகணைகளை இடைமறித்துத் தாக்கும் திறமை கொண்டவை ஆகும். இத விமானத்தில் ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் 3700 கிமீ தூரம் செல்லமுடியும்.
கடந்த 2016 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்துடன் இந்தியா அரசு 36 ரஃபேல் வி,மானங்களை வாங்க ஒப்பந்தம் இட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி ஒவ்வொரு விமானமும் ரூ.58000 கோடி என்னும் விலையில் வாங்க உள்ளது. இதில் முதல் கட்டம்,ஆக 10 ரஃபேல் விமானங்கள் தயார் செய்யப்பட்டுக் கடந்த 2020 ஆம் அண்டு ஜூலை 29 அன்று 5 விமானங்கள் இத்தியா வந்தன.
அதே வருடம் செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி அவை முறைப்படி இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டன. பிறகு 2 ஆம் கட்டமாக வந்த 3 விமானங்கள் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள அசிக்மார தளத்தில் செயல்படுத்தப்பட்டது பிறகு பல கட்டங்களாக ரஃபேல் போர் விமானங்கள் வந்தன. தற்போது 3 விமானங்கள் மட்டுமே வரவேண்டிய நிலை உள்ளது
இந்த 3 ரஃபேல் விமானங்கள்: அடுத்த வாரம் இந்தியா வர உள்ளதாக இந்திய விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்பு வந்ததைப் போல் இந்த 3 விமானங்களும் எரிபொருள் நிரப்பப்பட்டு பிரான்சில் இருந்து நேரடியாக அடுத்த வாரம் இந்தியா வர உள்ளன.