சென்னை:
மிழகத்தில் சட்டமன்றத்தை முடக்க நினைக்கும் இபிஎஸ்-இன் பகல் கனவு நிச்சயம் பலிக்காது என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வேலக்வுண்டனுரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய எடப்பாடி பழனி சாமி, மேற்கு வங்கத்தைப் போல தமிழகத்திலும் சட்டமன்றத்தை முடக்க நேரிடும் என்று தெரிவித்து இருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய அமைச்சர் சேகர் பாபு, தமிழகத்தில் சட்டமன்றத்தை முடக்க நினைக்கும் இபிஎஸ்-இன் பகல் கனவு நிச்சயம் பலிக்காது என்று தெரிவித்துள்ளார்.