மயிலாடுதுறை: மயிலாடுதுறையின் 19-வது வார்டில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் மரணம் அடைந்த நிலையில், அந்த வார்டுக்கான தேர்தலை, தேர்தல் ஆணையம் ஒத்தி வைத்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் (தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் முதல்நிலை பேரூராட்சி தவிர) என 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் 19.02.2022 அன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.

இந்த நிலையில்,  மயிலாடுதுறை நகராட்சி வார்டு 19-ல் போட்டியிட்ட அன்னதாச்சி என்ற வேட்பாளர் மாரடைப்பால் மரணமடைந்ததையடுத்து, அங்கு தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கடம்பூர் முதல்நிலை பேரூராட்சி தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும்  வேட்பாளர் தற்கொலை காரணமாக காஞ்சிபுரம் 36 வது வார்டு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.