சென்னை: பராமரிப்பு பணி காரணமாக  புறநகர் ரயில் சேவையில் 14ந்தேதி முதல் 23ந்தேதி வரை சில மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் வழித்தடத்தில் கடம்பத்தூர் மற்றும் திருவாலங்காடு இடையே வரும் 14, 15, 16, 17, 18, 21, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் காலை 10.45 மணி முதல் மதியம் 1.15 மணி வரையிலும், வரும் 19ம் தேதி காலை 11.35 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அவ்வழியாக இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி மூர் மார்க்கெட் – அரக்கோணம் இடையே காலை 9.50 மணிக்கு இயக்கப்படும் ரயில் (66047),

மூர் மார்க்கெட் – திருத்தனி இடையே காலை 10 மணிக்கு இயக்கப்படும் ரயில் (43507),

மூர் மார்க்கெட் – அரக்கோணம் இடையே காலை 11 மணிக்கு இயக்கப்படும் ரயில் (43413),

மூர் மார்க்கெட் – அரக்கோணம் இடையே காலை 9.50 மணிக்கும் இயக்கப்படும் ரயில் (43509) உள்ளிட்ட புறநகர் மின்சார ரயில்கள் 14, 15, 16, 17, 18, 21, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் செஞ்சி பனம்பாக்கம் ரயில் நிலையத்தில் நிற்காது.

அதேபோல் வேளச்சேரி – திருத்தணி இடையே காலை 11.20 மணிக்கு இயக்கப்படும் ரயில் (43941), வரும் 19ம் தேதி செஞ்சி பனம்பாக்கம் ரயில் நிலையத்தில் நிற்காது.  இ

வ்வாறு கூறப்பட்டுள்ளது.