பெங்களூரு: ஹிஜாப்  வழக்கில் எந்தவித உத்தரவையும் பிறப்பிக்காமல் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்படுவதாக கர்நாடக உயர்நீதி மன்றம் தெரிவித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் பள்ளி , கல்லூரிகளில் சமத்துவத்தை பின்பற்றும் வகையில் ஒரே சீருடை சட்டம் அமல்படுத்த அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், அதை ஏற்க மறுத்து, உடுப்பி அரசு பி.யூ மகளிர் கல்லூரியில் இஸ்லாமிய பெண்கள் சிலர் ஹிஜாப் அணிந்து வந்தனர். அவர்களை கல்லூரிக்குள் அனுமதிக்க நிர்வாகம் மறுத்த நிலையில், அவர்கள்  கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து ஹிஜாப் அணிந்து மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து,   மாணவிகள் ஹிஜாப் அணிந்துவருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மாணவ அமைப்பான ஏபிவிபி இயக்கத்தினர் காவித்துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர்.

ஹிஜாப் அணிந்து வந்தால், நாங்களும் காவித்துண்டு அணிந்து  கல்லூரிக்கு வருவோம் என்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பல கல்லூரிகளிலும் சர்ச்சை உருவானது. இதையடுத்து பள்ளி கல்லூரிகளை மூட மாநிலஅரசு உத்தர விட்டது.

இதற்கிடையில், இஸ்லாமியர்கள் சார்பில் ஹிஜாப் அணிந்துவதற்கு அனுமதிக்க கோரி தேசிய மனித உரிமை ஆணையம், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை முதலில் தனிநீதிபதி விசாரணை நடத்திய நிலையில், அவர் அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து, உயர்நீதிமன்ற அமர்வுக்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டார். அதையடுத்து, இன்று 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள்,  இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்  என்றும், ஹிஜாப் அணிவது எங்களின் அடிப்படை உரிமை என்றும் என  கோரிக்கை வைத்தனர்.

ஆனால், அதை ஏற்ப மறுத்த நீதிபதிகள், மேலும் விசாரணை நடத்த வேண்டியது இருப்பதால், விசாரணையை வரும் திங்கள் கிழமைக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தது.  வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் எந்த மாணவர்களும் மத உடை அணிய வலியுறுத்தக்கூடாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்னதாக ஹிஜாப் விவகாரம் விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உடனே விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வலியுறுத்தப்பட்டது. ஆனால், அதை  ஏற்க  உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது குறிப்பிடத்தக்கது.

எதிர்காலத்தில் செங்கோட்டையில் தேசியக்கொடிக்கு பதில் காவிக்கொடி ஏற்றப்படும்! கர்நாடக பாஜக அமைச்சர்