பாக்பத்: கடனால் பாதிக்கப்பட்ட உ.பி. வர்த்தகர் ஒருவர் தனது மனைவியுடன் ஃபேஸ்புக் லைவில் – விஷம் அருந்தி தற்கொலை முயற்சி செய்தார். இந்த சோக சம்பவத்தில் அவரது மனைவி பரிதாபமாக உயிரிழந்தார்.
முன்னதாக அவர் வீடியோவில், நான் மோடிஜியிடம் சொல்ல விரும்புகிறேன், நீங்கள் சிறு வியாபாரிகள் மற்றும் விவசாயிகளின் நலன் விரும்புபவர் அல்ல. உங்கள் கொள்கைகளை மாற்றிக் கொள்ளுங்கள்” என்று கண்ணீருடன் கூறும் காட்சி பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உ.பி.யில் இன்று முதல்கட்ட தேர்தல் நடைபெற்று வரும் நகரங்களில் ஒன்றான பாக்பத்தில் இந்த சோக சம்பவம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பான இரண்டு நிமிட வீடியோ வைரலானது. இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி உள்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் மத்தியஅரசுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 8ந்தேதி) அன்று செருப்பு விற்பனை செய்யும் வியாபாரியான ராஜீவ் தோமர் (வயது 40) வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தற்கொலை முடிவை நாடியுள்ளார். பேஸ்புக் நேரலையில் சென்று, வியாபாரத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி, விஷத்தை அருந்தினார். இதை தடுக்க அவரது மனைவி முயன்றபோது, அவரை மீறி அவர் ஏதோ பொருட்களை வாயில் போட்டு விழுங்கும் காட்சி வீடியோவில் வெளியாகி உள்ளது. அவரது வாயில் இருந்து விஷப்பொருட்களை வெளியேற்ற அவரது மனைவி முயற்சி செய்தும், முடியாத நிலையில், 38 வயதான அவரது மனைவு பூனம் தோமரும் விஷம் அருந்தியுள்ளார்.
“எனக்கு பேச சுதந்திரம் இருக்கிறது என்று நினைக்கிறேன். நான் பெற்ற கடனை அடைப்பேன். நான் இறந்தாலும் நான் செலுத்துவேன். ஆனால் இந்த வீடியோவை முடிந்தவரை அனைவரும் பகிருமாறு கேட்டுக்கொள்கிறேன். நான் தேச விரோதி அல்ல, ஆனால் நான் நாட்டின் மீது நம்பிக்கை உள்ளது. ஆனால் மோடி அரசு அறிவித்துள்ள ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) தனது வணிகத்தை வெகுவாக பாதித்து, தன்னை இந்த நிலைக்கு தள்ளியுள்ளதாக குற்றம் சாட்டியதுடன், கடைசியில்,
நான் மோடி-ஜியிடம் (பிரதமர் நரேந்திர மோடி) சொல்ல விரும்புகிறேன், நீங்கள் சிறு வியாபாரிகள் மற்றும் விவசாயிகளின் நலன் விரும்புபவர் அல்ல. உங்கள் கொள்கைகளை மாற்றிக் கொள்ளுங்கள்” என்று திரு தோமர் கண்ணீருடன் கூறுகிறார்.
இந்த சோக சம்பவத்தை ஃபேஸ்புக்கில் பார்த்த பலர் உடனே காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சிலர் அங்கு சென்று, அவர்களை மீடு, மருத்துவமனைக்கு அழைத்துசென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், தோமரின் மனைவி இறந்துவிட்ட நிலையில், தோமர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த விசாரணையில் தற்கொலை முயற்சி செய்த செருப்பு வியாபாரியான தோமர், சில காலமாக நிதி சிக்கலில் இருந்ததாக கூறப்படுகிறது. தற்கொலை முயற்சிக்கு ஒரு நாள் முன்பு, அவர் தனது இரண்டு மகன்களான 15 மற்றும் 11 உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டதாகவும் அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
தோமரின் ஷோரூமுக்கு அருகில் செயல்பட்ட மற்ற வர்த்தகர்கள் தொற்றுநோய் வணிகத்தை மோசமாக பாதித்ததாக ஒப்புக்கொண்டனர்.
இது தொடர்பான இரண்டு நிமிட வீடியோ வைரலானது. இதுகுறித்து, காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வத்ரா உள்ளிட்ட அரசியல்வாதிகள் எதிர்வினையாற்றினர்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீட்டில் செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி, “உ.பி. முழுவதும் சிறு வணிகர்கள், வணிகர்கள் மத்தியில் இதுபோன்ற துயரங்களை நாங்கள் காண்கிறோம். பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி மற்றும் பூட்டுதல் ஆகியவை அவர்களை மிகவும் பாதித்துள்ளன.” என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.