நாகர்கோவில்
காங்கிரஸ் மத்தியில் ஆட்சி அமைத்தால் மாநிலங்களுக்கு ஏற்றவாறு நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கூறி உள்ளார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமாக நடந்து வருகின்றது. இதில் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது நாகர்கோவிலில் உள்ள வேப்ப மூடு சந்திப்பில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி திமுக – காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் கே எஸ் அழகிரி,
“ஏற்கனவே தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வு தேவையில்லை என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றிய பிறகு அதனை மறுத்துப் பேச ஆளுநர் யார்? குடியாசுத் தலைவர் யார்?.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அந்தந்த மாநிலங்களின் வசதிக்கு ஏற்ப நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.
இதை ஏற்கனவே ராகுல் காந்தி அறிவித்துள்ளார். ராகுல் காந்தி எளிமையாகக் கூறிய இந்த பதிலைப் புரிந்து கொள்ள மோடி சிரமப்படுகிறார். இனியாவது மோடி தமிழக மக்களின் உணர்வுகளை மாணவர்களின் உரிமையைப் புரிந்து கொள்ள வேண்டும்”.
என்று கூறி உள்ளார்.