திருவனந்தபுரம்: மாசி மாத பூஜைக்காக வருகிற 12ம் தேதி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படும் என கேரள தேவசம் போர்டு அறிவித்து உள்ளது.

மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைகளுக்காக திறக்கப்பட்ட சபரிமலை அய்யப்பன் கோவில் 40 நாட்களுக்கு பிறகு ஜனவரி 20ந்தேதி அடைக்கப்பட்டது.  இதையடுத்து, மாசி மாத பூஜைக்காக வருகிற 12 ஆம் தேதி நடை திறக்கப்பட இருப்பதாக தேவசம் போர்டு அறிவித்து உள்ளது. அன்றைய தினம் பூஜைகள் நடைபெறாது என்று கூறப்பட்டுள்ளது. மறுநாள், அதிகாலை 5 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டு வழக்கம்போல் பூஜைகள் மற்றும்  சிறப்பு பூஜைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, சபரிமலை தரிசனத்திற்கு தினசரி 15 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே ஆன்லைன் முன் பதிவு அடிப்படையில் தரிசன அனுமதி அளிக்கப்படுகிறது.

இதற்கான ஆன்லைன் முன் பதிவு நேற்று தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.