சென்னை

கர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக சொற்ப இடங்களில் மட்டும் போட்டி இடுவதை நெட்டிசன் சவுக்கு சங்கர் கிண்டல் செய்துள்ளார்.

மத்திய ஆளும் கட்சியான பாஜகவுக்குத் தமிழகத்தில் அதிகம் மவுசு இல்லை என பொதுவாகப் பலரும் பேசி வருகின்றனர்.  அதற்கேற்றார் போல் மற்ற மாநில தேர்தல்களில் வெற்றி பெறும் பாஜகவினரால் தமிழகத்தில் வெற்றி பெற முடிவதில்லை.

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி இருந்தும் 5 இடங்களில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றது.   தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக அதிக இடங்களைக் கோரியதற்கு அதிமுக மறுப்பு தெரிவித்ததால் கூட்டணியில் பிளவு ஏற்பட்டது.

தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் பாஜக தனித்து போட்டியிடுகிறது.   வரும் 19 ஆம் தேதி நடைபெறும் தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இந்தியாவின் பெரிய கட்சியான பாஜக மொத்தமுள்ள இடங்களில் 43% இடங்களில் மட்டுமே போட்டியிடுகிறது.

இது குறித்து நெட்டிசன் சவுக்கு சங்கர் தனது டிவிட்டரில்,

“ஏன் அண்ணாமலை. மீதி சீட்டுக்கு ஆள் கிடைக்கலயா ? தமிழ்நாட்டுலயே பெரிய கட்சின்ன !! வெறும் 43% இடத்துலதான் போட்டி போடுற ? சலம்பல்லாம் வெறும் ட்விட்டர்லதானா”

எனக் கேலி செய்துள்ளார்.

இந்த பதிவில் பலரும் பாஜகவைக் கேலியாக விமர்சித்து பின்னூட்டம் இட்டு வருகின்றனர்.