டில்லி

ஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக சரண்ஜித் சிங் சன்னி யின் பெயரை அக்கட்சி தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.

மொத்தம் 177 தொகுதிகளைக்கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவைக்கு ஒரேகட்டமாக பிப்ரவரி 20-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.   இந்த தேர்தலில் சரண்ஜித் சன்னியை முதல்வர் வேட்பாளராகக்  காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.  இதை அவர் . லூதியானாவில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் அறிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சி முதல்வர் வேட்பாளர் யார் என குழப்பம் நிலவிவந்ததை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ஆம் ஆத்மி மற்றும் பாஜக போன்ற எதிர்க்கட்சிகள், காங்கிரஸ் தனது முதல்வர் வேட்பாளரைத் தேர்வு செய்வதற்குக்கூட பல்வேறு போராட்டங்களை நடத்திவருகிறது என விமர்சித்து பரப்புரை கூட்டங்களை நடத்தின.

தற்போது பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி நடத்திவரும் நிலையில் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளராக தற்போதைய முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி ராகுல் காந்தியால் அறிவிக்கப்பட்டுள்ளார்   தற்போது 58 வயதாகும் சரண்ஜித் சிங் சன்னி, தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார்

இவர் சம்கவுர் சாகிப் சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து, காங்கிரஸ் சார்பில், மூன்று முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவர் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங் தலைமையிலான அமைச்சரவையில், தொழில்நுட்ப கல்வி அமைச்சராக பதவி வகித்துள்ளார். கடந்த 2015 – 2016 வரை, பஞ்சாப் மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராகவும் சரண்ஜித் சிங் பதவி வகித்துள்ளார்.