சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 7,524 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தினசரி பாதிப்பு 8 ஆயிரத்துக்கு கீழே குறைந்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளத. அதிக பட்சமாக சென்னையில் 1223 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.
தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று இரவு 7.30 மணி அளவில் வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழ்நாட்டில் இன்று மட்டும் 1,26,701 மாதிரிகள் பரிசோதனை செய்யபட்டுள்ளது. மொத்தமாக தமிழகத்தில் 6,24,01,480 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாநிலத்தில் இன்று புதிதாக மேலும் 7,524 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு, 34,04,762 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மேலும் 37 பேர் பலியான நிலையில், இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை 37,733ஆக உயர்ந்துள்ளது. 24 மாவட்டங்களில் புதிய உயிரிழப்பு இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
இன்று ஒரேநாளில் மேலும் 23,938 பேர் தொற்றில் இருந்து விடுபட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 32,28,151 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தற்போதைய நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,38,878 ஆக குறைந்துள்ளது.
மாநிலத்தில் அதிகபட்ச பாதிப்பு சென்னையில் பதிவாகி உள்ளத. சென்னையில் 1223 பேரும், கோயம்புத்தூர் – 1020, செங்கல்பட்டு – 691, திருப்பூர் – 609, சேலம் – 386, ஈரோடு – 405 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டம் வாரியாக விவரம்:
அரியலூர் 49
செங்கல்பட்டு 691
சென்னை 1223
கோவை 1020
கடலூர் 117
தர்மபுரி 105
திண்டுக்கல் 56
ஈரோடு 405
கள்ளக்குறிச்சி 28
காஞ்சிபுரம்201
கன்னியாகுமரி223
கரூர் 64
கிருஷ்ணகிரி140
மதுரை 95
மயிலாடுதுறை 36
நாகப்பட்டினம்59
நாமக்கல்203
நீலகிரி98
பெரம்பலூர் 17
புதுக்கோட்டை 54
ராமநாதபுரம் 40
ராணிப்பேட்டை 113
சேலம் 386
சிவகங்கை 63
தென்காசி 28
தஞ்சாவூர் 143
தேனி 64
திருப்பத்தூர் 70
திருவள்ளு 311
திருவண்ணாமலை 119
திருவாரூர் 110
தூத்துக்குடி 54
திருநெல்வேலி 108
திருப்பூர் 609
திருச்சி 202
வேலூர் 45
விழுப்புரம் 94
விருதுநகர் 80