ராமநாதபுரம்:
கர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ராமநாதபுரம் 7வது வார்டு நகராட்சியில் திமுக வேட்பாளர் பிரவீன் தங்கம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ராமநாதபுரம் 7வது வார்டு நகராட்சியில் போட்டியிட திமுக வேட்பாளர் பிரவீன்தங்கம் மற்றும் அதிமுக வேட்பாளர் சோம சுந்தர பாண்டியன் ஆகிய இருவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில், அதிமுக வேட்பாளர் சோம சுந்தர பாண்டியனின் வேட்புமனு தவறாக பூர்த்தி செய்ததால் நிராகரிக்கப்பட்டதாக நகராட்சி தேர்தல் அலுவலர் சந்திரா அறிவித்துள்ளார்.

இதையடுத்து ராமநாதபுரம் 7வது வார்டு நகராட்சியில் திமுக வேட்பாளர் பிரவீன் தங்கம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.