சென்னை

தமிழக ஆளுநரை வெளியேறச் சொல்லும் ஹேஷ்டாக் #GetOutRavi  அகில இந்திய  அளவில் டிரெண்டிங் ஆகி உள்ளது.

மருத்துவக் கல்லூரிகள் மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் நீட் தேர்வு குறிட்த அச்சம் காரணமாக மாணவர்கள் தற்கொலை அதிகரித்து வருகிறது.  எனவே தமிழக அரசு நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரி சட்டப்பேரவையில் ஒரு மசோதாவை நிறைவேற்றியது,

அந்த மசோதா தமிழக ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.  சுமார் 5 மாதங்களாக அந்த மசோதா ஆளுநரால் கிடப்பில் போடப்பட்டது.  இந்நிலையில் ஆளுநர் இந்த மசோதாவை திருப்பு அனுப்பி உள்ளார்.  மேலும் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டால் பல ஏழை மாணவர்களால் மருத்துவக் கல்வி க்ற்க முடியாது என தெரிவித்த ஆளுநர் இது குறித்து மறு பரிசீலனை செய்ய கோரிக்கை விடுத்தார்.

ஆளுநர் இவ்வாறு திருப்பி அனுப்பியது தமிழகத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.   தமிழக ஆளுநரை திரும்ப பெறக் கோரி நேற்று நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.  தவிரத் தமிழகத்தில் சமூக வலைத்தளங்களில் பதியப்படும் #GetOutRavi என்னும் ஹேஷ் டாக் அகில இந்திய அளவில் ட்ரெண்டி|ங் ஆகி வருகிறது.