சென்னை

மிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்  வேட்பு மனுத் தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் ஆகும்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது.  இந்த தேர்தல் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள்< 490  பேரூராட்சிகள் ஆகிய அமைப்புக்களில் உள்ள 1374 மாநகராட்சி உறுப்பினர்கள் 3843 நகராட்சி உறுப்பினர்கள், 7621 பேரூராட்சி உறுப்பினர்கள் ஆகியோரை தேர்வு செய்ய நடைபெற உள்ளது.

கடந்த 25 ஆம் தேதி முதல் வேட்புமனு தொடங்கப்பட்டுள்ளது .   இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்யக் கடைசி நாள் ஆகும்.  இந்த முறை குறுகிய காலத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மிக குறுகிய இடைவெளியில் வேட்பு மனுத் தாக்கல் தொடங்கியது.  எனவே கட்சிகள், கூட்டணி, இட ஒதுக்கீட்டு ஆகிய பணிகளை விரைந்து முடிக்கும் நிலை உண்டானது.

இந்த தேர்தலில் பலமுனை போட்டி உள்ள போதிலும் திமுக – அதிமுக கூட்டணிகள் இடையே போட்டி நிலவுகிறது. அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன.  இதனால் நேற்று முன்தினம் முதல் வேட்பு மனு தாக்கல் சூடு பிடித்துள்ளது.  இதுவரை 37,518 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.