டெல்லி: மத்திய நிதியமைச்சர் இன்று தாக்கல் செய்த பொதுபட்ஜெட்டிடை வெறும் 90 நிமிடங்களில் வாசித்து முடித்தார். இன்றைய பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது.
அதன்படி, நாட்டின் மின்வாகன உபயோகத்தை அதிகரிக்கும் வகையில், கிராமங்களிலும் மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க மின்சார சார்ஜ் மையங்கள் அமைக்கப்படும். லக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரிகளை மாற்றிக் கொள்ளும் வசதி கொண்டுவரப்படும்.மின்சார வாகனங்களின் திறனை மேம்படுத்துவதற்கு தேவையான கட்டமைப்பை உருவாக்கவும், வாகனங்கள் மற்றும் மின்கலன்கள் வர்த்தகம் மற்றும் சேவையில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்கவும் திட்டம் வகுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், மகளிருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சகி இயக்கம், வாத்சல்யா இயக்கம், ஊட்டச்சத்து 2.0 இயக்கம் ஆகிய 3 திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் பத்திரப்பதிவுகளை மேற்கொள்ள ஒரே நாடு, ஒரே பதிவு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். One Nation, One Registration திட்டத்திற்காக, மாநில பதிவு தரவுகள் ஒரே குடையின் கீழ் இணைக்கப்படும். நில ஆவணங்களை மின்னணு முறையில் ஆவணப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பன்னாட்டு நிதி தீர்ப்பாயம் அமைக்கப்படும்.
நிலக்கரியில் இருந்து எரிவாயு மற்றும் ரசாயனம் உற்பத்தி செய்ய 4 புதிய தொழிற்சாலைகள்
திவாலான நிறுவனங்களை மூட கால அவகாசம் 2 வருடங்களில் இருந்து 6 மாதமாக குறைக்கப்படும்
மலைவாழ் மக்களுக்கு போக்குவரத்தை எளிதாக்க ‘பர்வத்மாலா’ திட்டம்.எளிதாக தொழில் தொடங்க சூழல் 2.0 திட்டம் துவங்கப்படும்.உற்பத்தி துறையில் ஒற்றை சாளர முறையில் அனைத்திற்கும் அனுமதி வழங்கப்படுகிறது.
இறுதியாக நாடாளுமன்றத்தில் 1.30 மணி நேரத்தில் பட்ஜெட் உரையை வாசித்து நிறைவு செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இது அவர் தாக்கல் செய்த 4வது நிதிநிதி நிலை அறிக்கை என்பதும், 2வது இ-பட்ஜெட் என்பதும் குறிப்பிடத்தக்கது.