டெல்லி: நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடரான, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற வருகை தந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு, குதிரைப்படை அணிவகுப்புடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை சபாநாயகர் ஓம்பிர்லா, ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் பிரதமர் மோடி நாடாளுமன்றத்துக்குள் அழைத்துச் சென்றனர்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கி உள்ளது. முதல்கூட்டடமான இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கி உள்ளது. இரு அவைகளின் கூட்டம் ஜெனரல் ஹாலில் நடைபெற்றது. இதில் பேசிய குடியசுரத் தலைவர், 75வது சுதந்திர தின விழா இந்த ஆண்டு கொண்டாடப்படவுள்ள நிலையில் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த அத்தனை போர் வீரர்களுக்கும் எனது வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.அடுத்த 25 ஆண்டுகளில் அனைத்து மக்களுக்கும் அதிகாரம் அளிக்கும் வகையில் அரசு திட்டம். மூத்த குடிமக்கள் 90% பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, இன்று நிதிலை குறித்த ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து நாளை 2022-23 நிதியாண்டுக்கான (ஏப்ரல் 2022 முதல் மார்ச் 2023 வரை) நிதிநிலை அறிக்கையை (செவ்வாய்க்கிழமை) நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் செய்கிறார்.
இன்று முதல் தொடங்க உள்ள இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி வருகிற 11ம் தேதியுடன் நிறைவடைகிறது. இரண்டாம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற மார்ச் 14ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி வரை நடக்கிறது.