புதுடெல்லி:
ஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியின் கட்டமைப்புக்கு ரூ 1 லட்சம் நன்கொடையாக கொடுத்த திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள இளநீர் வியாபாரி தாயம்மாவை மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார்.

அவர் தனது உரையில் இந்தியா கேட் அருகே உள்ள அமர் ஜவான் ஜோதி, தேசிய போர் நினைவு சுடர் ஆகியவை ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த உணர்வுபூர்வமான தருணத்தில் நிறைய பேர் தனது குடும்பத்தினரை கண்ணீரில் ஆழ்த்திவிட்டு வீரமரணம் அடைந்துள்ளனர். தேசிய போர் நினைவிடத்தில் உள்ள அமர் ஜவான் ஜோதி வீரமரணமடைந்த வீரர்களுக்கு சிறந்த மரியாதை என பல தியாகிகள் எனக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இந்தியாவின் பல்வேறு நாடுகள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலிருந்தும் இந்த போஸ்ட் கார்டுகள் வந்துள்ளன. திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் இளநீர் வியாபாரம் செய்யும் தாயம்மாள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வாழ்த்துகள். வறுமையில் வாடும் நிலையிலும் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியின் கட்டமைப்புக்கு ரூ 1 லட்சம் நன்கொடை அளித்தார். இதை செய்ய அவருக்கு மிகப் பெரிய மனம் வேண்டும் என்று தெரிவித்தார்.