சென்னை

ன்று மகாத்மா காந்திக்கு அவரது 75 ஆம் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் மற்றும் முதல்வர் மரியாதை செலுத்தி உள்ளனர்.

மகாத்மா காந்தி 1948 ஆம் வருடம் ஜனவரி 30 ஆம் தேதி கோட்சேவால் சுடப்பட்டு உயிர் இழந்தார்.  அவரது நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் விடுதலைப் போரில் உயிர் நீத்த வீரர்களின் நினைவாகத் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

தியாகிகள் தினத்தன்று சாதிய பாகுபாடும், தீண்டாமையும் சமூக முன்னேற்றத்திற்கு எதிரானவை என்று uரைத்திdட அண்ண காந்தியின் நினைவாகத் தீண்டாமை உறுதிமொழியும் மேற்கொள்ளப்படுகிறது.  இன்று மகாத்மா காந்தியின் 75 ஆம் நினைவு தினம் ஆகும்.

எனவே சென்னை, மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள உத்தமர் காந்தியடிகளின் உருவச்சிலைக்குக் கீழ் வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு  இன்று காலை  10 மணியளவில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.