சென்னை
வரும் பிப்ரவரி முதல் அனைத்து நாட்களிலும் வழிபாட்டுத் தலங்கள் பக்தர்களுக்குத் திறக்கப்படுகின்றன.
கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கடந்த 3 ஆம் தேதி முதல் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலாக்கப்பட்டது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன.
கட்டுப்பாடு காரணமாக அனைத்து வழிபாட்டுத் தலங்களும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களும் பக்தர்களுக்கு மூடப்பட்டன. இன்று தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு தளர்வுகளில் ஞாயிறு மற்றும் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும் அனைத்து கல்வி நிலையங்களும் பிப்ரவரி 1 முதல் திறக்கப்பட உள்ளன. அவ்வகையில் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் அனைத்து நாட்களிலும் திறக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. அதே வேளையில் தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.