புதுடெல்லி:
2022 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் – பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய பெயர்களில் மூன்று பிரிவாக வழங்கப்படுகிறது. கலை, இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் மற்றும் பொறியியல், பொது விவகாரங்கள், குடிமை சேவை, வர்த்தகம் மற்றும் தொழில்கள் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் மிகச்சிறந்த சாதனைகள்/சேவைக்காக இவை வழங்கப்படுகின்றன.

மிக அரிய மற்றும் தலைசிறந்த சேவையாற்றியவர்களுக்கு ‘பத்ம விபூஷன்’ விருதும், மிக உயரிய வகையில் தலைச்சிறந்த சேவையாற்றியவர்களுக்கு ‘பத்ம பூஷன்’ விருதும், எந்தத் துறையிலும் தலைசிறந்த பணியாற்றியவர்களுக்கு ‘பத்மஸ்ரீ’ விருதும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தையொட்டி அறிவிக்கப்படுகிறது.

கலைத் துறையில் பிரபா ஆத்ரே, இலக்கியம் மற்றும் கல்வித் துறையில் உத்தரப் பிரதேசத்தின் ராதேஷ்யாம் கெம்கா (மறைவுக்குப் பின்), சிவில் சர்வீஸ் துறையில் ஜெனரல் பிபின் ராவத் (மறைவுக்குப் பின்), பொது சேவை பிரிவில் கல்யாண் சிங் (மறைவுக்குப் பின்) பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்ம பூஷண் விருதுக்கான பட்டியலில் இடம் பிடித்துள்ளவர்கள்:

1. குலாம் நபி ஆசாத்
2. விக்டர் பானர்ஜி
3. குர்மீத் பவா
4. புத்ததேவ் பாட்டச்சார்ஜி
5. நடராஜன் சந்திரசேகரன்
6. கிருஷ்ண எல்லா, சுசித்ரா எல்லா
7. மாதுர் ஜாஃப்ரி
8. தேவேந்திர ஜஜாரியா
9. ரஷீத் கான்
10. ராஜீவ் மெஹ்ரிஷி
11. சத்ய நாராயண நாதெல்லா
12. சுந்தரராஜன் பிச்சை
13. சிரஸ் பூனாவாலா
14. சஞ்சய ராஜாராம்
15. பிரதீபா ரே
16. சுவாமி சச்சிதானந்த்
17. வஷிஷ்ட் திரிபாதி

பத்ம ஸ்ரீ விருதுக்கான பட்டியலில் இடம் பிடித்துள்ளவர்கள்:

பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளவர்கள்:

1. பிரஹலாத் ராய் அகர்வால்
2. கமலினி ஆஸ்தனா மற்றும் நளினி ஆஸ்தனா
3. சோனு நிகாம்
4. சிற்பி பாலசுப்பிரமணியம்
5. மாதுரி பர்த்வால்
6. ஹர்மோஹிந்தர் சிங் பேடி
7. மரியா கிறிஸ்டோபர் ப்ரிஸ்கி
8. நீரஜ் சோப்ரா
9. சுலோச்சனா சாவல்
10. சைஃபல் அலி தார்
11. லதா தேசாய்

இவ்வாறாக பாடகர் சோனு நிகாம், ஒலிம்பிக் வீரர் நீரஜ் சோப்ரா உள்ளிட்ட 107 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.