டில்லி

டில்லி அரசு மதுக்கடைகளின் வருட விடுமுறை தினங்களை 21லிருந்து 3 ஆக குறைத்துள்ளது.

டில்லி அரசு மதுக்கடைகளுக்கு வருடத்துக்கு 21 நாட்கள் விடுமுறை விட்டிருந்தது.   இதில் அனைத்து பண்டிகைகள் மற்றும் தேசிய விடுமுறை நாட்கள் அடங்கும்.  தற்போதைய நிலையில் டில்லி அரசின் கலால் விதிகள் மாற்றப்பட்டுள்ளன.  அத்னால் விடுமுறை தினங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து டில்லி அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் ”டில்லி கலால் விதிகள் 52 இன படி வருடத்துக்கு மூன்று நாட்கள் விடுமுறை விடபடுகிறது.  அவை குடியரசு தினம். காந்தி ஜெயந்தி மற்றும் சுதந்திர தினம் ஆகும்.

இந்த மூன்று தினங்கள் தேசிய விடுமுறை தினங்கள் என்பதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று தினங்களைத் தவிர வேறு நாட்களில் விடுமுறை அளிக்கப்பட்டால் அதற்காக பதிலுக்கு இந்த தினங்களில் கடைகளை திறக்கக்கூடாது.   அரசு இந்த விடுமுறை தினங்களை மேலும் அதிகரித்தால் அவ்வப்போது அறிவிப்பு வெளியாகும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

கடந்த வருடம் டில்லி அரசு மதுக்கடைகளுக்கு ஹோலி, தீபாவளி, ஜன்மாஷ்டமி, மொகரம், ஈத் உல் சுகா, புனித வெள்ளி,, ராம நவமி, மாகாவீர் ஜெயந்தி, புத்த பூர்ணிமா, வால்மீகி பிறந்த டினம், குருநானக் பிறந்த நாள், தசரா உள்ளிட்ட தினங்களில் விடுமுறை அறிவித்து இருந்தது.