ஸ்தான்புல்

முதல் முறையாகப் பாகிஸ்தான் நாட்டில் உச்சநீதிமன்ற பெண் நீதிபதியாக ஆயிஷா மாலிக் என்பவர் பதவி ஏற்றுள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் பெண் நீதிபதியாகப் பாகிஸ்தான் நீதித்துறை வரலாற்றில் முதல் முறையாக ஆயிஷா மாலிக் என்பவர் நியமிக்கப்பட்டார்.  இது அந்நாட்டுப் பெண்களுக்கு மிகவும் மகிழ்வை உண்டாக்கியது.    சுமார் 55 வயதாகும் ஆயிஷா மாலிக் ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் சட்டம்  பயின்றவர் ஆவார்.  இவர் சட்ட ஆலோசனை மையம் நடத்தி வந்தார்.

பிறக் சுமார் 20 ஆண்டுகள் லாகூர் உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியில் இருந்த ஆயிஷா மாலிக் பல சிறப்பான தீர்ப்புகளைச் சொத்துக் குவிப்பு, விவசாயிகள் பிரச்சினை ஆகிய வழக்குகளில் வழங்கியவர் ஆவார்.   இவரைப் பாகிஸ்தான் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க பாக் நீதித்துறை ஆணையம் பரிந்துரை செய்ததை ஏற்று இவர் நியமிக்கப்பட்டார்.

இன்று நடந்த பதவி ஏற்பு விழாவில் ஆயிஷா மாலிக் உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பதவி ஏற்றுக் கொண்டுள்ளார்.  சரித்திர புகழ் வாய்ந்த இந்த விழாவில் பதவி ஏற்றது மூலம் பாகிஸ்தான் நாட்டின் முதல் ஊசநீதிமன்ற பெண் நீதிபதி என்னும் பெருமையை ஆயிஷா மாலிக் பெற்றுள்ளார்.  ஏற்கனவே உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் ஆணாக உள்ள நிலையில் ஆயிஷா ஒரே ஒரு பெண் நீதிபதி ஆகி உள்ளார்.