மும்பை
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப் பிரபல பாடகியான லதா மங்கேஷ்கர் சர்வதேச அளவில் போற்றப்படும் பாடகி ஆவர். இவர் அனைத்து இந்திய மொழிகளிலும் திரைப்படப் பாடல்கள் பாடி உள்ளார். குறிப்பாக இந்தி திரையுலக பாடகிகளில் இவருக்கு எனத் தனி ரசிகர் கூட்டம் உள்ளது.
லதா மங்கேஷ்கருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையொட்டி அவர் மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால் அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது,
தற்போது அதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆயினும் அவர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.