சென்னை:
கோவை ஹாஜி ஜே.முகம்மதுரஃபிக்கு கோட்டை அமீர் விருது வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

மத நல்லிணக்கத்திற்காகப் பாடுபட்டு உயிர்நீத்த கோயம்புத்தூரைச் சேர்ந்த ’கோட்டை அமீர்’ அவர்களின் பெயரால் “கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம்” ஏற்படுத்தப்பட்டு தமிழ்நாட்டில் மத நல்லிணக்கத்திற்காகப் பாடுபட்டு சிறப்பாக சேவை செய்துவரும் ஒருவருக்கு ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தில் விருது வழங்கப்பட இருப்பதாக தமிழக அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது.
இந்நிலையில், வரும் குடியரசு தினவிழாவில் தமிழக அரசு சார்பில் வழங்கவுள்ள கோட்டை அமீர் விருது கோவை ஹாஜி ஜே.முகம்மதுரஃபிக்கு வழங்கப்படும் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]