சிட்னி: நடப்பு ஆண்டு (2022 ) நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த தொடரில், இந்தியா பாகிஸ்தானை முதல் ஆட்டத்தில் எதிர்கொள்ள உள்ளது.
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியே கோப்பை வென்றது. இந்த நிலையில், நடப்பு ஆண்டும் டி20 உலக கோப்பை தொடருக்கான போட்டிகளை ஐசிசி வெளியிட்டு உள்ளது.
அதன்படி, இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 2022 ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை தொடரில் 16 அணிகள் பங்கேற்கிறது.
இத்தொடரில் இந்தியா உள்பட 12 அணிகள் நேரடியாக குரூப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.எஞ்சிய 4 அணிகள் தகுதிச்சுற்றுகளில் வெற்றிபெற்று குரூப் சுற்றுக்குள் நுழைய உள்ளன.
குரூப் சுற்றுக்குள் நுழைவதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் அக்டோபர் 16-ம் தேதி தொடங்குகிறது. அதன் பின்னர், அக்டோபர் 22-ம் தேதி சனிக்கிழமை டி20 உலகக்கோப்பையின் லீக் சுற்றுப்போட்டிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது.
லீக் சுற்றின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா எதிர்கொள்கிறது.
முதல் சுற்று
குரூப் ஏ: இலங்கை, நமீபியா, இரண்டு தகுதிச் சுற்று
குரூப் பி: வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்து, இரண்டு தகுதிச் சுற்று
சூப்பர் 12 நிலை
குரூப் 1: ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஏ1, பி2
குருப் 2: பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, B1, A2
இந்த தொடரில் இந்தியா மோதும் அணிகளின் விவரம் மற்றும் தேதிகள் வெளியிடப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு,
அக்டோபர் 23ந்தேதி: இந்தியா vs பாகிஸ்தான் (மெல்பேர்ன்)
அக்டோபர் 27ந்தேதி : இந்தியா vs ஏ2(சிட்னி)
அக்டோபர் 30ந்தேதி : இந்தியா vs தென்னாப்பிரிக்கா (பெர்த்)
நவம்பர் 2ந்தேதி: இந்தியா vs பங்களாதேஷ்(பெர்த்)
நவம்பர் 6ந்தேதி : இந்தியா vs பி 1 (மெல்பேர்ன்)
நவம்பர் 9ம் தேதி: முதல் அரையிறுதி
நவம்பர் 10ம் தேதி: இரண்டாவது அரையிறுதி
நவம்பர் 13ம் தேதி: இறுதிப்போட்டி