பார்ல்:
ந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றியைப் பெற்றது.

இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின், முதல் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 296/4 ரன்கள் எடுத்தது.

297 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணி 265/8 ரன்கள் எடுத்து, 31 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இரு அணிகள் இடையேயான இரண்டாவது போட்டி, இதே மைதானத்தில் நாளை மறுநாள் நடைபெறும்.