மெல்பர்ன்

பிரபல இந்திய டென்ன்சி வீராங்கனை சானியா மிர்சா விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

டென்னிஸ் விளையாட்டில் பிரபலமாக உள்ள வீராங்கனை சானியா மிர்சா கிராண்ட்ஸ்லாம் போட்டியில்  வெற்றி பெற்ற முதல் இந்தியர் ஆவார்.   இவர் 2016 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓப்பன டென்னிஸ் போட்டியில்  மார்ட்டின ஹிங்ஸ் உடன் இணைந்து பெண்கள் இரட்டை பிரிவில் வெற்றி பெற்று  சாதனை படைத்தார்.  இதன் மூலம் அவர் பெண்கள் டென்னிஸில் மிகவும் வலிமையான ஒரு  ஜோடியை உருவாக்கினார்.

தற்போது நடந்து வரும் ஆஸ்திரேலியா ஓபன் 2022 தொடரில் முதல் சுற்று போட்டியில் 35 வயதான மிர்சா மற்றும் அவரது உக்ரைன் ஜோடி நதியா கிச்செனோக் 4-6, 6-7 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தனர். இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் 37 நிமிடங்கள் நீடித்தது. போட்டியின் போது சானியா மோர்சாவுக்கு முழங்காலில் வலி ஏற்பட்டது.

இந்த போட்டிக்குப் பின் சானியா மிர்சா செய்தியாளர்களிடம், “இனி நான் குணமடைய அதிக நேரம் எடுக்கும் என்று நினைக்கிறேன். இந்த நீண்ட நேர பயணம் மூலம் எனது 3 வயது மகனைத் துயரத்தில் ஆழ்த்துகிறேன். நான் மிகவும் உடல் சேர்வடைவது போல் உணர்கிறேன்.

எனக்கு இன்று முழங்கால் வலிக்கிறது, எங்கள் தோல்விக்கு இதுவே காரணம் என்று நான் சொல்லவில்லை,  ஆயினும் எனக்கு வயதாகிவிட்டதால் குணமடைய நேரம் எடுக்கும் என்று நினைக்கிறேன்.  இதுவே எனது கடைசி போட்டியாக இருக்கும்.  நான் இனி விளையாடப்போவதில்லை“ எனத் தெரிவித்துள்ளார்.