சென்னை: வங்கியில் வாங்கிய கடனை செலுத்தாத காரணத்தினால்  தி.நகர் பிரைம் சரவணா ஸ்டோருக்கு அதிகாரிகள் இன்று காலை  ‘சீல்’ வைத்தனர்.

சென்னையின் வணிக பகுதியான தி.நகரில் சரவணா ஸ்டோர்ஸ்சின் பல கிளைகள் உள்ளன. இந்த நிலையில், தி.நகர் உஸ்மான் ரோட்டில் செயல்பட்டு வந்த பிரைம் சரவணா ஸ்டோர்ஸ்க்கு இன்று காலை வந்த வங்கி அதிகாரிகள், வாங்கிய கடனை திரும்பி செலுத்தாததால், நீதிமன்ற உத்தரவின்படி, சீல் வைத்தனர்.

தி.நகரில் உள்ள பிரைம் சரவணா ஸ்டோர் தங்க மாளிகை கடந்த கடந்த 2017 ம் ஆண்டு பஇந்தியன் வங்கியிடம் ரூ.240 கோடி பெற்ற கடன் பெற்றுள்ளது. இது வட்டியுடன் குட்டிபோட்டு தற்போது 400 கோடியாக உயர்ந்துள்ளது. வாங்கிய கடனை சரவணா ஸ்டோர்ஸ் முறையாக செலுத்தவில்லை என்று கூறப்படுகிறத.

இதுதொடர்பாக கடன் கொடுத்த  இந்தியன் வங்கி எழும்பூர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம் பிரைம் சரவண ஸ்டோருக்கு சீல் வைக்க உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து அதிகாரிகள் இன்று கடைக்கு சீல் வைத்தனர்.

எழும்பூர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அட்வகேட் கமிஷ்னர் துரியன் முன்னிலையில் பிரைம் சரவணா ஸ்டோருக்கு சீல் வைக்கப்பட்டது.