காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொளச்சூர்  சுப்பிரமணி சுவாமி கோவிலுக்கு 25 லட்சம் மதிப்பிலான வெள்ளிக் கவச உடையை சசிகலா வழங்கி,  தரிசனம் செய்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் மொளச்சூர் பகுதியில் உள்ள அருள்மிகு வள்ளி – தெய்வானை சமேத சுப்பிரமணிய திருக்கோயிலில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள சுப்பிரமணியன், வள்ளி, தெய்வானை சிலைகளுக்கு பொருந்தும்படியான வெள்ளிக்கவசத்தை, சசிகலா வழங்கி சிறப்பு வழிபாடு நடத்தினார்.

காஞ்சிபுரம் சென்ற சசிகலாவுக்கு, அமமுகவினர் வழிநெடுக வரவேற்பு அளித்தனர்.  மொளச்சூர் பகுதியில் உள்ள அருள்மிகு வள்ளி – தெய்வானை சமேத சுப்பிரமணிய திருக்கோயிலுக்கு வருகை தந்த சசிகலாவுக்கு மொளச்சூர் பெருமாள் தலைமையில் அமமுகவினர் வரவேற்பு அளித்தனர். அதைத்தொடர்ந்து கோவிலுக்கு சென்ற சசிகலாவுக்கு, கோயில் நிர்வாகம் சார்பில், சசிகலாவுக்கு பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

பின்னர், சுவாமிக்கு அணிவிப்பதற்காக வெள்ளிக் கவசம், வேல் ஆகியவற்றை சசிகலா வழங்கினார். அந்த  வெள்ளிக் கவசம் மற்றும் வேலுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.   தொடர்ந்து அந்த வெள்ளிக்க கவசங்கள், வள்ளி – தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு  அணிவிக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன.

இந்த நிகழ்ச்சியில் சசிகலா கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், அந்த பகுதியில் உள்ள  ஏழை – எளிய மக்களுக்கு  நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.