ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக போட்டியிட்ட 169 பேரில் 115 பேர் வெற்றி பெற்றனர்.
13 பேர் போட்டியின்றி தேர்வான நிலையில் மொத்தம் 129 பேர் வெற்றி பெற்றதாக விஜய் மக்கள் இயக்கம் கூறிவந்தது.
இந்த தேர்தலில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும் களமிறங்க தயாராகி வருகிறது.
தேர்தலில் போட்டியிட நடிகர் விஜயிடம் அனுமதி கேட்டுள்ளதாகவும் அதற்கு அவர் இசைவு தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
விஜய்யின் இந்த முடிவு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்ற விவாதத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.