துரை

நிரந்தர பிரதமராக மோடி இருக்க முடியாது எனக் காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவரும் சிவகங்கை மக்களவை உறுப்பினரும் கார்த்தி சிதம்பரம்  இன்று மதுரை வழியாக விமானத்தில் சென்னை சென்றார்.  அவரை மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்தித்தனர்.  கார்த்தி சிதம்பரத்திடம் அவர்கள் கேள்விகள் கேட்டனர்.  அதற்கு கார்த்தி சிதம்பரம் பதில் அளித்துள்ளார்.

அப்போது கார்த்தி, “குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழகம் மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட 3 மாநில ஊர்திகள் இடம் பெறவில்லை.   அரசு இது குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை.  தென் மாவட்டங்களில் பாஜகவுக்குச் செல்வாக்கு இல்லை.  பாஜக கர்நாடகாவில் மட்டுமே ஆட்சியில் உள்ளதால் இவ்வாறு செய்துள்ளனர்.

பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பஞ்சாப் முதல்வர் வீட்டில் சோதனைகள் நடைபெறுகின்றன.  இதன் மூலம் எதிர்க்கடைகளை முடக்க பாஜக தனது வழக்கமான சதியைச் செய்கிறது.    ஆனால் பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மியூசிகல் சேர் போல பாஜகவினர் கட்சி மாறுவது வழக்கமாகி வருகிறது.

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மோடியை நிரந்தர பிரதமர் எனக் கூறி உள்ளார்.  ஆனால் மோடி நிரந்தர பிரதமராக இருக்க முடியாது.  இங்கு நிரந்தரம் என்பது எதுவுமே இல்லை.   முன்பு இவர்கள் ஜெயலலிதாவை நிரந்தர முதல்வர் எனக் கூறியம் அது நிரந்தரம் ஆகவில்லை.   பிறகு மோடி எங்கள் டாடி என கூறியவர்கள் தற்போது அவரை நிரந்தர பிரதமர் எனக் கூறுவதும் நிரந்தரமில்லை” எனத் தெரிவித்துள்ளார்.