சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் மறைந்த வாழப்பாடியார் 82-வது பிறந்தநாள் இன்று காங்கிரஸ் கட்சியினரால் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை மந்தைவெளியில் உள்ள ராஜீவ்பவனில் உள்ள வாழப்பாடியார் திருவுருவ சிலைக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் வாழப்பாடியார் மகனும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவருமான இராம.சுகந்தன் உள்பட கட்சியினர் உடனிருந்தனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் வாழப்பாடியார் 82-வது பிறந்தநாள் விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், எண். 11, 2வது பிரதான சாலையில் அமைந்துள்ள ராஜிவ் பவனில் வாழப்பாடியாரின் திருவுருவ சிலைக்கு காங்கிரஸ் கட்சியினரும், வன்னியர் அமைப்பினரும் மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், வாழப்பாடியாரின் திருவுருவ சிலைக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேரில் வந்து மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியின்போது அவருடன் கட்சி நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத்தலைவரான வாழப்பாடி ராமசுகந்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அதுபோல வாழப்பாடியார் அவர்களின் 82 வது பிறந்தநாளை முன்னிட்டு சேலம் மாவட்டம் வாழப்பாடியில் நினைவிடத்தில் சேலம் மற்றும் சுற்றுவட்டார மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் மலர்வளையம் மற்றும் மலர்மாலைகள் வைத்து மரியாதை செய்தனர்.