மக்கள் நீதி மைய கட்சியின் தலைவரும் நடிகருமான கமலஹாசன் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வழக்கமான மருத்துவ சிகிச்சை தான் எனவும் இன்று மாலையே வீடு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமலஹாசன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
கொரோனா தொற்றில் இருந்து குணமான நிலையில் மீண்டும் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார், இந்நிகழ்ச்சி நேற்று நிறைவடைந்த நிலையில், இன்று மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Patrikai.com official YouTube Channel