வடலூர்
வடலூரில் நடைபெறும் தைப்பூச விழாவுக்குப் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் வடலூரில் ஒவ்வொரு வருடமும் தைப்பூச திருவிழா விமரிசையாக நடப்பது வழக்கம். இங்கு ராமலிங்க அடிகளார் ஜோதியுடன் கலந்ததைக் கொண்டாடும் விதமாக ஜோதி தரிசனம் நடைபெறும். இதைக் காண ஏராளமான பக்தர்கள் கூடுவது வழக்கமாகும். தற்போது கொரோனா பரவலால் மக்கள் ஒரே இடத்தில் கூட தடை செய்யப்பட்டுள்ளது.
இதையொட்டி கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள உத்தரவில்,
“தமிழக அரசு மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின்படி 18.01.2022 செவ்வாய்க் கிழமை, சத்திய ஞானசபையில் காலை 6.00, 10.00 பிற்பகல் 01.00, இரவு 7.00 மற்றும் இரவு 10.00 மணியளவில் பக்தர்கள் பங்கேற்பின்றி ஜோதி தரிசன விழா நடைபெறும்.
எனவே தைப்பூசம் ஜோதி தரிசனத்தை 18.01.2022 செவ்வாய்க் கிழமை காலை 6.00, 10.00, பகல் 1.00, இரவு 7.00, 10.00 மற்றும் 19.01.2022 புதன் கிழமை காலை 5.30 ஆக ஆறு காலங்களிலும் வள்ளலார் தெய்வ நிலைய அதிகாரப்பூர்வ யூ-டியூப் சேனலில் (https://www.youtube.com/channel/UCEiJozGGHgOZFISkQAOB93A) நேரலையிலும் மற்றும் தொலைக்காட்சிகள் வாயிலாகவும் வீட்டிலிருந்தபடியே பாதுகாப்பாகக் கண்டுகளிக்க மாவட்ட ஆட்சித் தலைவரால் கேட்டுக் கொள்ளப்படுகிறது.”
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.