நாகப்பட்டினம்:
முழு ஊரடங்கு காரணமாக நாகை மாவட்டம் முழுவதும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஜனவரி 6 முதல் இரவு நேர ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, தமிழக அரசின் உத்தரவுப்படி 2-ஆவது வாரமாக இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதை யொட்டி நாகை, நாகூர், வேளாங்கண்ணி, கீழ்வேளூர் மற்றும் மாவட்டத்தின் பிறப்பகுதிகளிலும் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டு மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.