அசாம்:
முழுமையாகத் தடுப்பூசி போடாதவர்கள் நாளை முதல் பொது இடங்களுக்குள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், முழுமையாகத் தடுப்பூசி போடாதவர்கள் நாளை முதல் மாவட்ட நீதிமன்றங்கள், ஓட்டல்கள், சந்தைகள் போன்ற பொது இடங்களுக்குள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். அசாமில் லாக்டவுன் அறிவிக்கும் சூழ்நிலை இன்னும் ஏற்படவில்லை இருப்பினும் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அவசியம் அணிய வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
Patrikai.com official YouTube Channel