கொழும்பு: தமிழக மீனவர்களின் காவலை இலங்கை நீதிமன்றம் மேலும் நீட்டிப்பபு செய்துள்ள நிலையில, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு  அவசர டிவிட் மூலம் தமிழக மீனவர்களை விரைவில் மீட்க வலியுறுத்தி உள்ளார்.

தமிழகத்தின் ராமேஸ்வரம் பகுதிமீனவர்கள் நெடுந்தீவு அருகே கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை கைது செய்து, மீனவர்களின் படகுகளையும் கைபற்றி எடுத்துச்சென்றனர். பின்னர், அவர்கள் அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

தமிழக மீனவர்களை மீட்க வலியுறுத்தி தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்தியஅரசுக்கு கடிதம் எழுதி அழுத்தம் கொடுத்த நிலையில், தற்போது, மீனவர்களின் காலை இலங்கை நீதிமன்றம் மேலும் நீடித்துள்ளதை கண்டித்தும், தமிழக மீனவர்களை விரைவில் மீட்க வலியுறுத்தியும்,  மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கருக்கு  தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  டிவிட் மூலம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்.