சென்னை: தண்ணீர் திருட்டு வழக்குகளில் சிக்கிய விவசாயிகளுக்கு கடன் கொடுக்கக்கூடாது என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை பரம்பிக்குளம் ஆழியாறு இணைப்பு திட்டம் கால்வாயில் இருந்து 2 நபர்களுக்கு தண்ணீர் எடுக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யவேண்டும் என  வழக்கு தொடரப்பட்டது. மனுவில்,  தண்ணீரை சமமாக பங்கிட வேண்டும் என்றும், குறிப்பிட்ட  2 நபர்களுடக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது சட்ட விரோதமானது, இதனால்  மற்ற விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்று கூறப்பட்டடிருந்தது.

இந்த மனுமீது இன்று சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை நடைபெற்றது. விசாரணையைத் தொடர்ந்து,  தண்ணீர் திருட்டு வழக்குகளில் சிக்கிய விவசாயிகளுக்கு விவசாய கடன் வழங்க கூடாது என தமிழ்நாடு அரசுக்கு  உத்தரவிட்டார். அவர்களை மானிய விலையில் உரம், விதை பெற முடியாதபடி கருப்பு பட்டியலில் சேர்க்க உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

மேலும், சட்டவிரோதமாக தண்ணீர் எடுப்பவர்களுக்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.