சென்னை: பிரபல திரைப்பட நடிகை ஷோபனாவுக்கு ஒமிக்ரான தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. அவர் சிகிச்சையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமீபகாலமாக அதிகரித்து வரும் தொற்று பாதிப்பில் திரையுலகினர் அடுத்தடுத்து சிக்கி வருகின்றனர்.  கடந்த மாதம் நடிகர்கள் கமல்ஹாசன், விக்ரம் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த வாரம்  நடிகர் அருண் விஜய்,  நடிகை மீனாவும் அவரது குடும்பத்தினர், நடிகை திரிஷா, ஷெரின், நடிகர் சத்யராஜ் , நடிகர் விஷ்ணு விஷால் உள்பட பலர் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பலர் குணமடைந்துள்ளனர்.

இந்த நிலையில், பிரபல நடிகை ஷோபனா தற்போது கொரோனா பாதிப்பில் சிக்கி உள்ளார். அவருக்கு ஒமிக்ரான் வகை தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. ஷோபனா ஏற்கனவே இரண்டு டோஸ் தடுப்பூசியும் போட்டுக்கொண்டதால்  பாதிப்பு குறைவாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த ஒமிக்ரானுடன் பெருந்தொற்று முடிவுக்கு வர வேண்டிக்கொள்கிறேன் என ஷோபனா தெரிவித்துள்ளார்.