சென்னை
தமிழகத்தில் இன்று 12,895 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 28,00,286 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இன்று தமிழகத்தில் 1,48,308 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை 5,85,27,532 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.
இன்று 12,895 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதில் வெளிநாட்டில் இருந்து 34 பேர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து 18 பேர் வந்துள்ளனர். இதுவரை 28,00,286 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவால் இன்று 12 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 36,855 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 1,808 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 27,12,096 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தற்போது 51,335 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று சென்னையில் 6,186 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 5,88,668 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் இன்று 5 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 8,676 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இன்று 681 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,54,194 பேர் குணம் அடைந்துள்ளனர்.
தற்போது சென்னையில் 25,798 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் செங்கல்பட்டு 1,512 உடன் இரண்டாம் இடத்திலும் திருவள்ளூர் 702 உடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.

மொத்த பாதிப்பில் இரண்டாவதாக் உள்ள கோவை மாவட்டத்தில் 2,55,947 பேர் பாதிக்கப்பட்டு 2,524 பேர் உயிர் இழந்து 2,50,649 பேர் குணம் அடைந்து தற்போது 2,474 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மொத்த பாதிப்பில் மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது. இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,81,616 பேர் பாதிக்கப்பட்டு 2,555 பேர் உயிர் இழந்து 1,73,079 பேர் குணம் அடைந்து தற்போது 5,982 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
[youtube-feed feed=1]