மேல்தட்டு மக்களுக்கான கட்சி பாஜக என நிரூபித்த வானதி
** கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் , மருத்துவப் படிப்புக்கான உயர் நிலைத் தேர்வாக ‘ நீட் ‘ என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது!
அதே நேரத்தில், அது தொடர்பான விவாதங்களுக்கு அன்றைய மன்மோகன் சிங் அரசு அனுமதித்தது!
அந்தத் தேர்வின் சாதக, பாதகங்களை நன்கு உணர்ந்த அந்த அரசு, ” இத் தேர்வு கட்டாயம் இல்லை… விரும்புகிற மாநிலங்கள் வைத்துக் கொள்ளட்டும்! விரும்பாத மாநிலங்கள் இத் தேர்வை நடத்த வேண்டியது இல்லை! ” என்று தெளிவாக அறிவித்தது!
அதன்படி அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதியும், அதற்குப் பின் வந்த ஜெ. வும் இந்த ‘ நீட் ‘ டை தமிழகத்துக்குள் நுழைய அனுமதிக்கவில்லை!
ஆனால்… ஜெ. மறைவுக்குப் பிறகு ஆட்சி எடப்பாடி கைக்கு வந்ததும், ‘இது தான் சமயம்’ என்று ஆதிக்க சக்தி மாணாக்கர்களுக்கு ஆதரவான ஒன்றிய மோடி அரசு..
அடிமையாய்க் கிடந்த எடப்பாடி ஆட்சியில், கிராமப் பற்றி மாணாக்கர்களுக்கு எதிரான ‘ நீட் : அரக்கனைத் தமிழகத்துக்குள் அனுமதித்தது!
இதன் விளைவு… 12 ஏழைக் கிராமத்து மாணாக்கர்கள் தற்கொலை செய்து கொண்டு மாண்டனர்!
சமூக நீதி சவக்குழிக்குள் போனது! இதனால் தான்… தி. மு.க உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ( அ. தி. மு. க. வும்) சேர்ந்து நீட்டை ரத்து செய்ய வேண்டுமென்று போராடுகின்றன!
ஆனால், நேற்றைய தினம் (8.1.2022) தமிழக அரசு சார்பில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பா. ஜ. க. சார்பில் கலந்து கொண்ட அக்கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், ” இக் கூட்ட முடிவுகளில் எங்களுக்கு உடன்பாடு இல்லை… ” என்று கூறிவிட்டு வெளிநடப்பு செய்திருக்கிறார்!
“இதன் மூலம், ‘பா. ஜ.க. ஒரு மேல்தட்டு மக்களுக்கான கட்சி என்பது உண்மையாகி விட்டது… ” என்கிறார்கள் மக்கள்!!
*** ஓவியர் இரா.பாரி.