கோவை:
கோவை வெள்ளலூரில், உள்ள பெரியார் சிலையின் மீது மர்மநபர்கள் காவி பொடியினை தூவி, செருப்பு மாலை அணிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று அதிகாலை, கோவை வெள்ளலூரில், உள்ள பெரியார் சிலை மீது மர்மநபர்கள் செருப்பு மாலை போட்டு, காவி பொடியினை தூவியுள்ளனர். இதனால், திராவிடர் கழகத்தை சார்ந்தவர்கள் அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இச்சம்பவம் குறித்து போத்தனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அங்குள்ள சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி இக்குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்கள் யார் என்பது குறித்த விசாரணையை மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு கோவை சுந்தராபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு, இதேபோன்று காவி சாயம் பூசப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பல்வேறு தலைவர்களின் கண்டனங்கள் எழுந்த நிலையில், அருண் கிருஷ்ணன் என்பர் சரனடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.