சென்னை: பாமக மாநில துணைச்செயலாளர் திருஞானம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
இதுகுறித்து அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அதிமுக இணைஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிச்சாமியை பாமக மாநில துணைசெயலாளரும், சிவகங்கை மாவட்டச் செயலாளருமான ச.திருஞானம் நேரில் சந்தித்து, அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியின்போது, சிவகங்கை மாவட்டக்கழக செயலாளர் பி.ஆர்.செந்தில்நாதன் எம்எல்ஏ, கழக செய்தித்தொடர்பாளர் மருது அழகுராஜ், மானாமதுரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

Patrikai.com official YouTube Channel