டெல்லி: டிஜிட்டல் வடிவிலான சான்றிதழ்களை கல்வி நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என யுஜிசி அறிவித்து உள்ளது.

தகவல் தொழில்நுட்ப சட்டம்,2000 இன் விதிகளின்படி,டிஜிலாக்கர் உள்ள டிகிரி மற்றும் மதிப்பெண் சான்றிதழ்கள் செல்லும் என பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) அறிவித்துள்ளது.
டிஜிலாக்கர் கணக்கில் வழங்கப்பட்ட ஆவணங்களில் உள்ள பட்டம், மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் பிற ஆவணங்களை சரியான ஆவணங்களாக ஏற்றுக்கொள்ளுமாறு நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகம்,கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களையும் பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.

Patrikai.com official YouTube Channel