சென்னை

துவரை தமிழகத்தில் 5,81,03,351 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன.

நாடெங்கும் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்து வருகிறது.  இது மூன்றாம் அலை கொரோனா பரவலாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.  இதையொட்டி பல மாநிலங்களில் கட்டுப்பாடு விதிமுறைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன,.  கொரோனா பரிசோதனை எண்ணிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அவ்வகையில் இதுவரை தமிழகத்தில் மட்டும் 5,81,03,351 பரிசோதனைகள் நடந்துள்ளன.  இதில் சென்ற ஜூன் மாதம் 12 ஆம் தேதி அதிகபட்சமாக 1,82,878 சோதனைகள் நடந்துள்ளன.  கடந்த ஒரு வாரமாகவே தமிழகத்தில் சோதனைகள் அதிகரித்து வருகின்றன.

அவற்றின் விவரம் வருமாறு:

டிசம்பர் 31 : 1,04,615

ஜனவரி 1 : 1,03,607

ஜனவரி 2 : 1,02,237

ஜனவரி 3 : 1,03,119

ஜனவரி 4: 1,03,798

ஜனவரி 5 : 1,17,611

ஜனவரி 6: 1,28,736